25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


 இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா- பிரதமர் மோடி சந்திப்பு  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா- பிரதமர் மோடி சந்திப்பு  .

. ஈட்டி எறிதல் இந்தியாவின் வீரர் நீரஜ் சோப்ரா, 27.கடந்த 2021ல் டோக்கியோஒலிம்பிக்கில் தங்கம், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 

இந்த ஆண்டு தோஹா டைமண்ட் லீக் தொடரில், தனது கனவு இலக்கான 90.23 மீ., துாரம் ஈட்டி எறிந்துசாதித்தார். இவருக்கு ராணுவத்தில் 'லெப்டினன்ட் கவுரவ கர்னல்' அந்தஸ்து வழங்கி கவுர விக்கப்பட்டது. உலகதடகளசாம்பியன் ஷிப்பிலும் பதக்கங்கள் வென்றார்.

 தனது மனைவி ஹிமானி மோர் உடன், நேற்று நீரஜ் சோப்ரா பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள அவரது அதிகாரப் பூர்வ இல்லமான 'லோக் கல்யாண் மார்க்'கில் சந்தித்தார்.

இது பற்றி பிரதமர் மோடி  சமூகவலைத் தளத்தில் வெளியிட்ட  செய்தியில், “நீரஜ் சோப்ரா, அவரது மனைவியை சந்தித்தேன். விளையாட்டு உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி சிறப்பாக கலந்துரையாடினோம்,' என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் விளையாட்டுத் துறை மீதான அவரது தொலைநோக்குப் பார்வையும் ஆதரவும்இந்தியர்களுக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கும்,' என குறிப்பிட்டுள்ளார். நீரஜ் சோப்ரா வெளியிட்ட செய்தியில், 'எங்களை சந்தித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News